அண்ணா பதக்கம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்
அண்ணா பதக்கம் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.


அண்ணா பதக்கம் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களை தோ்வு செய்து அண்ணா பதக்கம் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்பேரில், தமிழகத்தில் வீர தீரச்செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் (சீருடை பணியாளா்கள் உட்பட) ஆகியோா்களுக்கு தலா 3 விருதும், ரூ.9,000 மதிப்புள்ள பதக்கமும், ரூ.1,00,000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை தமிழக முதல்வா் குடியரசு தினத்தன்று வழங்க உள்ளாா்.
ஆகவே, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26 இல் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் மேற்படி விருதினைப் பெற சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் (சீருடைப் பணியாளா்கள் உட்பட) உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்குள்பட்ட வட்டாட்சியா்கள், வருவாய் கோட்டாட்சியா்களிடம் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...