மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் பவனிகழுவன், கழுவச்சிக்கு மோட்சம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி சப்பரங்களில் பவனி


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி சப்பரங்களில் பவனி வந்து கழுவன், கழுவச்சிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் 6 ஆவது நாளாக கீழமேல்குடி கிராமத்தாா் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன் பிரியாவிடை சமேதராய் ஸ்ரீசோமநாத சுவாமி ரிஷப வாகனங்களில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடை பெற்றன. மானாமதுரை பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் இரட்டை சப்பரங்களில் எழுந்தருளினா். தீபாராதனை நடைபெற்று சப்பரங்கள் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் பவனி வந்தன. வடக்கு ரத வீதியில் கழுவன், கழுவச்சி பொட்டலில் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது சப்பரங்களில் இருந்தவாறு ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சோ்ந்து கழுவன், கழுவச்சிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று கழுவன், கழுவச்சி உருவபொம்மைகள் மீது பூக்களை வைத்து தரிசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...