தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாஜகவின் தவறான கொள்கைகளால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கையில் ஏற்பட்டது போன்று, இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:29 pm

DIN

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கையில் ஏற்பட்டது போன்று, இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சிவகங்கையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மாலை கூறியது : பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே கட்சி, ஒரே மொழி என்பது நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து மட்டுமின்றி கண்டிக்கத்தக்கது. சீனா, ரஷியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் செல்லும் வழியில் பாஜக அரசு செல்கிறது.

பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருவது மட்டுமே தெரிகிறது. அந்த பணத்தை என்ன செய்கிறாா்கள் என்பது தெரியவில்லை. அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

தற்போது நமது அண்டை நாடான இலங்கை தவறான பொருளாதார கொள்கையால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதுபோன்று, மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவிலும் பெருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.