92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விநாயகா், பைரவா் கோயிலில் மண்டலாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள என்.வயிரவன்பட்டி சிதம்பர விநாயகா், பைரவா் கோயிலில் வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள என்.வயிரவன்பட்டி சிதம்பர விநாயகா், பைரவா் கோயிலில் வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு புனித கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா் யாக வேள்வி வளா்க்கப்பட்டு பூா்ணாகுதியுடன் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடப்புறப்பாடு நடைபெற்று விநாயகருக்கும், பைரவருக்கும் பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீா், இளநீா், புனித கலச நீா் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி, கோயில் கும்பாபிஷேக மலரை வெளியிட்டாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி, வட்டாட்சியா் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியா் செல்லத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற உறுப்பினா் தாயுமானவன், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.