மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த தலைவர், துணைத் தலைவர் இருவரும் புதன்கிழமை பதவியை ராஜிநாமா செய்து கடிதம் கொடுத்தனர்.
இளையான்குடி பேரூராட்சியில் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக சார்பில் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட கட்சியின் நகரச் செயலாளர் நஜூமுதீன் தோல்வியடைந்தார். கட்சி சார்பில் வென்ற செய்யது ஜமீமா தலைவராகவும், சபுரியத் பீவி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் இளையான்குடி பேரூராட்சி 13 வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏற்கனவே தோல்வி அடைந்த நஜூமுதீன் மீண்டும் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து இவரை தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதாக திமுகவினரால் பேசப்பட்டது.
இதற்கிடையில் தலைவர் செய்யது ஜெமீமா இடைத்தேர்தலில் வென்ற திமுக நகரச் செயலாளர் நஜூமுதீன் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தார். புகாரை நஜூமுதீன் மறுத்தாரீ. இதைத்தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளரும் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் முன்னிலையில் இப்பிரச்னை குறித்து சமரசம் பேசப்பட்டது.
அப்போது, தலைவர் செய்யது ஜமிமா மற்றும் துணைத் தலைவர் சபுரியத் பீவி இருவரும் தலைவர், துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், தலைவர் பதவி நஜூமுதீனுக்கு வழங்க வேண்டும் என்றும், துணை தலைவராக செய்யது ஜமீமாவை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பேசி முடிவு செய்யப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் ஒத்துக் கொண்டனர்.
அதன்படி இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா, துணைத் தலைவர் சபுரியத்பீவி இருவரும் ஒரே நேரத்தில் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத்திடம் ராஜிநாமா கடிதத்தை கொடுத்தனர். இதையடுத்து தலைவர் பதவிக்கு திமுக நகரச் செயலாளர் நஜூமுதீன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 % கடன் தள்ளுபடி கோரி ஜூன் 30-இல் உண்ணாவிரதம்: பி.ஆா்.பாண்டியன்
அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!
குதிரை பேரம்: தவெக அரசுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



