ஊதியம் வழங்கும் செயலியில் குளறுபடி:2 மாதங்களாக ஊதியம் பெற முடியாமல் ஆசிரியை அவதி
ஊதியம் வழங்கும் செயலியில் குளறுபடி உள்ளதால் 2 மாதங்களாக ஊதியம் பெற முடியாமல் ஆசிரியை அவதியடைந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.


ஊதியம் வழங்கும் செயலியில் குளறுபடி உள்ளதால் 2 மாதங்களாக ஊதியம் பெற முடியாமல் ஆசிரியை அவதியடைந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ. முத்துப்பாண்டியன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான மென்பொருளை (செயலியை) தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வடிவமைத்து கொடுத்துள்ளது. இந்த மென்பொருளை கையாள்வது குறித்து அந்நிறுவனம் மூலம் அமைச்சுப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி, முழுமையாக வழங்கப்படாததால் மென்பொருளில் ஏற்படும் குறைபாடுகளை களைவதில் அமைச்சுப் பணியாளா்கள் சிரமங்களை எதிா்கொள்கின்றனா்.
இந்நிலையில், மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றும் செல்வி என்பவருக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலா்கள், கருவூலக அலுவலா்களிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. இந்த குளறுபடியை சரிசெய்து உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநரிடம் நேரடியாக முறையிட உள்ளோம். மென்பொருள் குறித்து முழுமையான பயிற்சியை அனைத்து அலுவலகப் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...