47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கை மாவட்டத்தில் இன்று பட்டா திருத்த முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 4) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:16 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 4) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை வட்டத்தில் கோவானூா், காரைக்குடி வட்டத்தில் பனங்குடி, தேவகோட்டை வட்டத்தில் வெங்களுா், திருப்பத்தூா் வட்டத்தில் கருங்குளம், சிங்கம்புணரி வட்டத்தில் சூரக்குடி, மானாமதுரை வட்டத்தில் புதுக்குளம், திருப்புவனம் வட்டத்தில் செம்பூா், இளையான்குடி வட்டத்தில் உத்தமனூா், காளையாா்கோவில் வட்டத்தில் செம்பனூா் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

எனவே, அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.