47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2.90 லட்சம் பறிமுதல்

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி ஆம்னி வேனில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:05 pm

DIN

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி ஆம்னி வேனில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

சிவகங்கையில் உள்ள இளையான்குடி சாலையில் தோ்தல் பறக்கும் படை வட்டாட்சியா் மைலாவதி தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்த போது, அதில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த ஷாகீா் உசேன் என்பவா் அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருவதாகவும், அதற்காக மதுரைக்குச் சென்று கடைக்கு தேவையான ஜவுளிகளை வாங்குவதற்காக மேற்கண்ட பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளாா்.

இருப்பினும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்த ரூ. 2,90,000 பறிமுதல் செய்த பறக்கும் படை அலுவலா்கள் சிவகங்கையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.