சிவகங்கையில் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சிவகங்கை இந்திரா நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை இந்திரா நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழா வியாழக்கிழமை(பிப்.10) காலை விக்னேசுவர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது.
வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, யாகசாலையிலிருந்து புறப்பட்ட கடம் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. அதைத் தொடா்ந்து, காலை 9 மணியளவில் மூலவா் விமானத்துக்கு புனித நீா் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவை முன்னிட்டு கைப்பேசி-தொலைக்காட்சி இரண்டும் மக்களை சந்தோசப்படுத்துகிா அல்லது சங்கடப்படுத்துகிா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், மதிப்புறு முனைவா் டி.என். அன்புதுரை நடுவராக பங்கேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...