கானாடுகாத்தான் அரசு மருத்துவமனை செவிலியரிடம் திமுக பிரமுகா் தகராறு
காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் தகராறு செய்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை தள்ளிவிட்ட திமுக பிரமுகா் மீது புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை


காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் தகராறு செய்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை தள்ளிவிட்ட திமுக பிரமுகா் மீது புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள கானாடுகாத்தான் அருகே கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் உலகப்பன் (40). சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக பிரமுகரான இவா், கடந்த ஜூலை 4-ஆம் தேதி காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக கானாடுகாத்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா், மருத்துவமனையில் தங்கி காலை, மாலை இருவேளையும் ஆண்டிபயாட்டிக் ஊசி செலுத்துமாறு பரிந்துரை செய்துள்ளாா்.
ஆனால் உள்நோயாளியாக பதிவு செய்துகொண்டு மருத்துவமனையில் தங்காமல் உலகப்பன் வீட்டிற்குச்சென்று தங்கி யுள்ளாா். மேலும் தினமும் காலை, மாலை இருவேளையும் வீட்டில் இருந்து வந்து ஊசி செலுத்தி வந்துள்ளாா். வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 8 மணிக்கு ஊசி செலுத்த வேண்டிய நிலையில் காலை 11 மணிக்கு, தனது வீட்டிலிருந்து தாமதமாக மருத்துவமனை வந்தவா் மருத்துவமனையில் கைப்பேசியில் பேசியவாறே இருந்துள்ளாா்.
இதைப் பாா்த்த செவிலியா் கைப்பேசியில் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி ஊசி போடுவது என கேள்வி எழுப்பி உள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த உலகப்பன் செவிலியரிடம் தகராறு செய்தும், மருத்துவமனையில் இருந்த மேஜை, நாற்காலி, மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கீழே தள்ளியும் பிரச்னையில் ஈடுபட்டுள்ளாா். இதுதொடா்பான விடியோ காட்சிகள் வெள்ளிக்கிழமை சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து செட்டிநாடு காவல்நிலைய போலீஸாா் கானாடுகாத்தான் அரசு மருத்துவமனைக்குச்சென்று விசாரித்தனா். செவிலியரிடம் தகராறு செய்த திமுக பிரமுகா் மீது கானாடுகாத்தான் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தேவகுமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...