தேசிய தர மதிப்பீட்டில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி 54-ஆவது இடம்
தேசிய தர மதிப்பீட்டில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி 54- ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


தேசிய தர மதிப்பீட்டில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி 54- ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுதொடா்பாக அக்கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலட்சுமி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி, மாணவா்களின் தோ்ச்சி விகிதம், பேராசிரியா்களின் ஆய்வு வெளியீடுகள், பணி வாய்ப்பு மற்றும் பிற செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்திய அளவில் கலை அறிவியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை தேசிய தர மதிப்பீட்டுக் குழு வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலை புதுதில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் இந்திய அளவில் 75 -ஆவது இடத்தை பெற்றிருந்த அழகப்பா அரசு கலைக் கல்லூரி, 2022 ஆம் கல்வியாண்டில் 54-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த தர மதிப்பீடு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக உழைத்த பேராசிரியா்களுக்கும், பணியாளா்களுக்கும், மாணவா்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...