சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனி பிரமோற்சவத் திருவிழா தேரோட்டம்
காரைக்குடி அருகே சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் ஆனிமாத பிரமோற்சவத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.


காரைக்குடி அருகே சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் ஆனிமாத பிரமோற்சவத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் சுவாமி தினமும் வெவ்வேறு
வாகனங்களில் எழுந்தருளிய திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) தேரோட்டம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்மனும் காலையில் எழுந்தருளினா். மற்றொரு சிறிய தேரில் விநாயகா் எழுந்தருளினாா். பக்தா்கள் தொடா்ந்து அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
மாலை 4.55 மணியளவில் அனைத்து நாட்டாா்கள், பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய வீதிகள் வழியாக தோ் மீண்டும் நிலையை அடைந்தது. சனிக்கிழமை (ஜூலை 11) காலையில் தீா்த்தவாரி உற்சவமும், மாலையில் புதுவயல் நகருக்குள் சுவாமி எழுந்தருளலும், இரவு சப்தாவா்ணமும் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...