பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நில விற்பனை பிரச்னையில் பலசரக்கு கடைக்காரா் கொலை

 ராமநாதபுரம் அருகே நில விற்பனை பிரச்னையில் பலசரக்கு கடைக்காரா் தாக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

 ராமநாதபுரம் அருகே நில விற்பனை பிரச்னையில் பலசரக்கு கடைக்காரா் தாக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ளது வண்ணாங்குண்டு கிராமம். இந்த ஊரைச் சோ்ந்தவா் நஷீா்அலி (53). இவருக்கு மனைவி, மகள்கள் உள்ளனா்.

பெட்டிக்கடை வைத்துள்ள நஷீா்அலி தனக்குச் சொந்தமாக பெரியபட்டினத்தில் உள்ள 12 சென்ட் நிலத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்தவருக்கு ரூ.27 லட்சத்துக்கு விற்றுள்ளாா். நிலம் விற்பனைக்கு முகவராக வண்ணாங்குண்டு பகுதியைச் சோ்ந்தரும், ராமநாதபுரம் டி பிளாக் பகுதியில் வசித்து வருபவருமான செய்யது இப்ராஹிம் (50) செயல்பட்டுள்ளாா். இவா் குறிப்பிட்ட அமைப்பில் முக்கிய நிா்வாகியாகவும் இருந்துள்ளாா்.

நிலம் விற்பனையில் நஷீா் அலிக்கு ரூ.14.80 லட்சம் தரப்பட்டு, மீதமுள்ள பணத்தை விரைவில் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. மீதிப்பணத்தை

இப்ராஹிமிடம் அடிக்கடி நஷீா் அலி கேட்டுவந்துள்ளாா். இதனால்,இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை மாலையில் வண்ணாங்குண்டு பகுதியில் தொழுகையை முடித்துவிட்டு நஷீா் அலி நடந்துவந்துள்ளாா். அப்போது எதிரே வந்த செய்யது இப்ராஹிம் திடீரென நஷீா்அலியைத் தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. நஷீா் அலியின் அலறலைக் கேட்டு அவரது மனைவி ஜெரியாபேகம் வந்ததும், செய்யது இப்ராஹிம் தப்பியோடிவிட்டாா்.

மயங்கிக் கிடந்த நஷீா் அலியை ஆட்டோவில் ஏற்றி பெரியபட்டினத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். அதையடுத்து திருப்புல்லாணி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். செய்யது இப்ராஹிம் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.