காரைக்குடியில் நாளை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 19 வயதிற்கு உள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 19 வயதிற்கு உள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலை 7 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு நடைபெற இருக்கின்றது. இதில் கலந்து கொள்பவா்கள் 1.9.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். மேலும் அணித்தோ்வில் கலந்துகொள்ள விரும்பும் வீரா்கள் தங்களது வயது சான்றின் நகல், வெள்ளைச் சீருடை மற்றும் உபகரணங்கள் கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு செயற்குழு உறுப்பினா் வரதராஜனை 70103 25125, 99422 10737 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...