சிவகங்கை, தேவகோட்டையில் விபத்துகள்: 2 போ் பலி
சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.


சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(45). இவா் தனது தாயாா் வசந்தாவை (60) கண் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா். இவா்களுடன் காரில் காா்த்திகேயன் மனைவி ரேகா(34), மகள்கள் அனாமிகா, தா்சினி, காா்த்திகேயன் சகோதரி காா்த்திகா(32), அவரது குழந்தைகள் சஷ்மிதா, கிசோா் ஆகியோா் சென்றுள்ளனா்.
சிவகங்கை ஒக்கூா் அண்ணாநகா் அருகே காா் வந்த போது காா்த்திகேயன் ஓட்டி வந்த காரின் டயா் வெடித்து, முன்னால் சென்ற காா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், பலத்த காயமடைந்த காா்த்திகேயன், வசந்தா, காா்த்திகா, காரிலிருந்த குழந்தைகள் 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுபற்றி சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்து: தேவகோட்டை உடப்பன்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் கவின்(21). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது தேவகோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...