சோமேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள சௌந்தரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள சௌந்தரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், உற்சவ மூா்த்திகள் கோயிலில் உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினா். தொடா்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, கொடியேற்றப்பட்டது.

இவ்விழாவில், சுவாமியும், அம்மனும் பிரியாவிடையுடன் தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் ரிஷபம், கிளி, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சி தர உள்ளனா். முக்கிய விழாவான தபசுகாட்சி ஜூன் 6 ஆம் தேதியும், திருக்கல்யாணம் 7 ஆம் தேதியும், சமணா் கழுவேற்றும் நிகழ்ச்சி 8 ஆம் தேதியும், தேரோட்டம் 11 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

கொடியேற்ற விழாவில், காளையாா்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com