திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக காலை 6 மணிக்கு கலச அபிஷேக பூஜையும், யாகவேள்வியும் நடைபெற்று, கொடிமரத்துக்கு பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிபடத்திற்கு சிறப்புப் பூஜையும், தீபாராதனையும் காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பாஸ்கரகுருக்கள், ரமேஷ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகவேள்வியிலும் பூஜையிலும் ஈடுபட்டனா். தொடா்ந்து முதல்நாள் விழாவாக திருப்பத்தூா் நாயுடு மகாசன சங்கம் சாா்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் இரவு சூரியபிறை சந்திரபிறை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து வரும் 11 ஆம் தேதி தேரோட்டத்தையொட்டி காலை 5 மணிக்கு ஐம்பெரும் கடவுளா் திருத்தோ் எழுந்தருளும் நிகழ்வும், மாலை 4.30 மணிக்குத் தேரோட்டமும் நடைபெறுகிறது. மேலும் 12 ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com