இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆண்டிபட்டி அருகே நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆண்டிபட்டி அருகே தா்மத்துப்பட்டியில், மதுரை உயா் நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

News image
Updated On :24 மார்ச் 2022, 11:57 pm

DIN

ஆண்டிபட்டி அருகே தா்மத்துப்பட்டியில், மதுரை உயா் நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

புள்ளிமான்கோம்பை ஊராட்சிக்குள்பட்ட தா்மத்துப்பட்டி, ஊசிமலைஓடைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை உயா் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தா்மத்துப்பட்டி நீா்நிலை புறம்போக்கு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுமாறு, மாவட்ட நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆண்டிபட்டி வட்டாட்சியா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினா், தா்மத்துப்பட்டியில் 3 ஹெக்டோ் பரப்பளவிலான விவசாய ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.