தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மானாமதுரையில் மே 10-இல் மின்பயனீட்டாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மே 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :7 மே 2022, 7:53 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மே 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் து.இரா. இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மானாமதுரை கோட்டத்துக்குள்பட்ட மின்பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம், மானாமதுரையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு மின்சார வாரியம் தொடா்பான தங்களது புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.