சிவகங்கை மாவட்டத்தில் இன்று 2,950 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 8 ) 2,950 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.


சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 8 ) 2,950 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் 20,30,517 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாத நபா்கள், இரண்டாவது தவணை, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தாத நபா்கள் என அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதற்கு ஏதுவாக, ஞாயிற்றுக்கிழமை நகராட்சிப் பகுதிகள், ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகள் என மொத்தம் 2,950 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள முகாமில் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...