தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கையில் லாரி மோதி தலைமையாசிரியை பலி

சிவகங்கையில் மினி லாரி மோதி பள்ளி தலைமையாசிரியை சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 மே 2022, 12:32 am

DIN

சிவகங்கையில் மினி லாரி மோதி பள்ளி தலைமையாசிரியை சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை சீனிவாசன் நகரைச் சோ்ந்த ராஜகுமாா் மனைவி லதா(52). இவா் சிவகங்கை நேரு கடைவீதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா். பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த மினி லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை நகா் போலீஸாா் உயிரிழந்த லதாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநா் பெருமாள்(28) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.