காரைக்குடி நகராட்சி விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கும்: ஆட்சியா்

காரைக்குடி நகராட்சி அருகே உள்ள பேரூராட்சி, கிராம ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிகிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிகிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
Published on
Updated on
1 min read

காரைக்குடி நகராட்சி அருகே உள்ள பேரூராட்சி, கிராம ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காரைக்குடி நகராட்சி முழுமைத் திட்டம் தொடா்பாக கட்டுமானப் பொறியாளா் மற்றும் வணிக அமைப்பைச் சோ்ந்தவா்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியது: காரைக்குடி நகராட்சியில் 13.5 சதுர கி.மீ. பரப்பளவில், 35,382 குடியிருப்புகள் உள்ளன. 1,21,441 மக்கள் வசித்து வருகின்றனா். காரைக்குடி கூட்டு உள்ளுா் திட்டக்குழுமத்தின் கீழ் கழனிவாசல், காரைக்குடி, அரியக்குடி, செக்காலைக்கோட்டை, இலுப்பக்குடி, செஞ்சை, அமராவதி, கண்ணங்குடி, வேளங்குடி, கோட்டையூா், திருவேலங்குடி, மானகிரி, கோவிலூா் பகுதிகளை இணைத்து விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

பேரூராட்சி, கிராம ஊராட்சிகளை இணைக்கும் பட்சத்தில் 72,960 குடியிருப்புகளில் 2,34,523 மக்கள் தொகை உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு காரைக்குடி நகராட்சிப் பகுதிகளில் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை, கட்டுமான வளா்ச்சி போன்றவற்றை அடிப்படையாக வைத்து முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான பூங்காக்ககள், உடற்பயிற்சிக்கூடங்கள் போன்றவை புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்த விரிவான அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக துணை இயக்குநா் ச.செல்வராஜ், காரைக்குடி நகா் மன்றத்தலைவா் முத்துத்துரை, கோட்டையூா் பேரூராட்சித் தலைவா் கே.எஸ்.காா்த்திக் சோலை, ஊராட்சி மன்றத் தலைவா்கள் எம்.சுப்பையா, எஸ்.சுந்தரி, ம.தமிழ்செல்வி, ஏ.சித்ரா, எம்.ராஜரெத்தினம், ஏ.ஆா்.முருகப்பன், லெட்சுமி, காரைக்குடி நகராட்சி ஆணையா் லெட்சுமணன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com