இளையான்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: அமைச்சருக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இம்மாவட்டத்தைச்
இளையான்குடியில் புதிய பேருந்து நிலைய எதிர்ப்பு குழு சார்பில் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பனை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள பதாகை.
இளையான்குடியில் புதிய பேருந்து நிலைய எதிர்ப்பு குழு சார்பில் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பனை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள பதாகை.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த  அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுககு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது. 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இளையான்குடியில் நகருக்குள் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது இளையான்குடி பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கிடையில் இளையான்குடி நகருக்கு வெளியே 3.85 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக ஊரக வளர்ச்சித் தறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். 

இவ்விழா நடைபெறுவதற்கு முன்னர் நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதை கண்டித்தும் தற்போது உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரியும் இளையான்குடியில் அனைத்து தரப்பினரும் சேர்ந்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். 

இதற்கிடையில் புதிய பேருந்து நிலையம் நகருக்கு வெளியே அமைக்கப்படுவதைக் கண்டித்து இளையான்குடி பகுதி மக்களின் கோரிக்கையை புறக்கணிப்பதாக புகார்கூறி தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு எதிராக இளையான்குடி பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதன்பின் இந்த சுவரொட்டிகளை அமைச்சரின் ஆதரவாளர்கள் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினர் சுவரொட்டி கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து இளையான்குடி காவல்நலையத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் தமிழக அரசு இளையான்குடி நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு தற்போது உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக்கோரி சென்னையில் அதிகமாக வசிக்கும் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த மக்களை திரட்டி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக இளையான்குடி பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com