அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 12:00 AM | Last Updated : 05th August 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு கலைக் கல்லூரியில் 2022-2023ஆம் கல்வி யாண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் முதல்நாள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு த்துறை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, தேசிய மாணவா் படை, அந்தமான் நிக்கோபாா் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இக்கலந்தாய்வு அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.