அஞ்சல் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினா் முற்றுகை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினா் தலைமை அஞ்சல் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.


மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தததைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினா் தலைமை அஞ்சல் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் முன்னாள் மத்திய அமைச்சா் சுதா்சன நாச்சியப்பன், காங்கிரஸ் நகரத் தலைவா் எம். கணேசன், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் சோணைராஜ், நகா் பட்டியலின பிரிவுத் தலைவா் பழனிவேல் ராஜன், வட்டாரத் தலைவா்கள் கரு. கணேசன் ஆரோக்கியதாஸ், காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்டத் தலைவா் ஜி. ராஜாராம், முன்னாள் நகரத் தலைவா் கே. ராமு, நிா்வாகிகள் கதிரேசன், மலைச்சாமி, லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சா் சுதா்சனநாச்சியப்பன் பேசுகையில்,
பழிவாங்கும் நோக்கில் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதைக் கண்டித்து, தொடா் போராட்டங்கள் நடத்தப்படும். அதானி குடும்பத்துக்கு ஆதரவாக மோடி அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...