நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

7,500mAh பேட்டரியுடன் மார்ச் 24-ல் வெளியாகும் ஒன்பிளஸ் 15 டி!

ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறித்து...

News image

ஒன்பிளஸ் 15 டி - படம் / நன்றி - ஒன்பிளஸ்

Updated On :18 மார்ச் 2026, 5:54 pm IST

ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் டி வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

இந்தியாவில் வெளியாகும் முன்பே சீனாவில் வெளியிட ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனானது, ஒன்பிளஸ் 13எஸ் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமானது. அந்தவகையில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனும் ஒன்பிளஸ் 15எஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15டி சிறப்பம்சங்கள்

  • ஒன்பிளஸ் நிறுவனம் 15டி ஸ்மார்ட்போனின் சிறப்புகளை முன்பே அறிவித்திருந்தது. இதன்படி 6.32 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 165Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • திரையிலேயே விரல் தொடுகையும் (fingerprint) உள்ளது.

  • சாக்லேட், இலைப் பச்சை, வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கின்றன.

  • ஸ்நாப்டிராகன் 8 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.

  • 7,500mAh பேட்டரி திறன் கொண்டது. வயர் மூலம் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறனும், வயர் இல்லாமல் 50W வேகத்தில் சார்ஜ் ஆகும் திறனும் உடையது.

Summary

OnePlus 15T smart phone China launch confirmed for THIS date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.