ஷாவ்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஷாவ்மி 17 மற்றும் ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை இந்திய சந்தையில் இன்று தொடங்கியுள்ளது.
ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை புராசஸர், 3,500 nits திரைப் பிரகாசம் போன்றவை இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகளாகப் பார்க்கப்படுகின்றன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனம் இந்திய பயனர்களுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா ஆகிய இரு தயாரிப்புகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன.
12GB உள்நினைவகம் (RAM) + 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 89,999.
512GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 99,999.
எஸ்பிஐ வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 10,000 விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்கு ஸ்பாடிஃபை செயலியை சப்ஸ்கிரிப்ஷன் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்
ஷாவ்மி 17 ஸ்மார்ட்போன், 6.3 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொண்டது
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,500 nits வழங்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி 17 அல்ட்ரா, 6.9 அங்குல அமோலிட் திரை கொண்டது.
3,500 nits திரை பிரகாசமும், சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறனும் உடையது.
இரு ஸ்மார்ட்போன்களுமே ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.
ஷாவ்மி 17 6,330mAh பேட்டரி திறன் பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறன் கொண்டது.
ஷாவ்மி 17 அல்ட்ரா, 6,000mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ ஆகும் வகையில் 90W திறன் கொண்டது.
Summary
Xiaomi 17, Xiaomi 17 Ultra smart phone go on sale in India: Prices, offers, and key specs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் விற்பனை மந்தம்

ஒன்பிளஸ், ஐகியூ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஷாவ்மியின் 17டி அறிமுகம்!

டெக் துணுக்குகள்...

6500mAh பேட்டரி திறன்... மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




