தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஷாவ்மி பேட் 8 அறிமுகம்! பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்கள்!

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய கையடக்கக் கணினி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

News image

ஷாவ்மி பேட் 8 - படம் / நன்றி - ஷாவ்மி

Updated On :10 மார்ச் 2026, 5:14 pm IST

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய கையடக்கக் கணினி (டேப்லெட்) இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. கடந்த மாதம் சர்வதேச சந்தைகளில் அறிமுகமான நிலையில், இந்திய சந்தைக்கு ஏற்ற விலை மாற்றங்களுடன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான், எம்ஐ.காம் இணைய விற்பனை தளங்களிலும் ஷாவ்மி கிளைகளிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

வழக்கமான ஷாவ்மி பேட் 8 உடன், ஃபோகஸ் பென், ஃபோகஸ் கீபோர்டு ஆகிய இரண்டையும் ஷாவ்மி அறிமுகம் செய்துள்ளது.

  • 8GB + 128GB நினைவகம் கொண்ட ஷாவ்மி பேட் 8 விலை ரூ. 33,999.

  • 12GB + 256GB நினைவகம் கொண்ட ஷாவ்மி பேட் 8 விலை ரூ. 36,999.

  • இதே நினைவகத்துடன் நானோ புறவடிவமைப்பு கொண்ட ஷாவ்மி பேட் 8 விலை ரூ. 38,999.

ஷாவ்மி பேட் 8 சிறப்பம்சங்கள்

  • ஷாவ்மி பேட் 8 கையடக்கக் கணினிகள் கிராஃபைட் சாம்பல், டைட்டானியம் நீலம் என இரு வகை வண்ணங்களில் கிடைக்கின்றன.

  • 11.2 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது. 3.2K ரெஷொல்யூசன் (3,200 x 2,136 pixels) உடையது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 800 nits திறன் உடையது.

  • 4nm ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 8எஸ் நான்காம் தலைமுறை புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 9,200mAh திறன் பேட்டரி உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் உடையது. 22.5W ரிவர்ஸ் சார்ஜ் அம்சமும் உள்ளது.

  • பின்பக்கம் 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4K திறனுடன் 30 fps திறனுடன் விடியோ பதிவாகும். முன்பக்கம் 8MP கேமரா உள்ளது.

  • வைஃபை 6, புளூடூத் 6.0, யுஎஸ்பி 3.2, போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

  • 200% வரை ஒலி அளவை கூட்டிக்கொள்ள முடியும். டோல்பி ஒலித்திறன் உடையது.

Summary

Xiaomi has launched the Xiaomi Pad 8 in India with a 144Hz display, Snapdragon 8s Gen 4 chip

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.