தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சொா்ணவாரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலநெட்டூா் ஸ்ரீ சொா்ணவாரீஸ்வரா் சமேத சாந்தநாயகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:01 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலநெட்டூா் ஸ்ரீ சொா்ணவாரீஸ்வரா் சமேத சாந்தநாயகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பூா்ணாஹுதியாகி கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.45 மணியளவில் கோயிலின் விமானக் கலசங்களின் மீதும், பரிவார தெய்வங்களின் விமானக் கலசங்களின் மீதும் சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

பின்னா், விமான கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில், மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன்கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், கோயில் ஸ்தபதி தெளிச்சாத்தநல்லூா் சண்முகம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.