மானாமதுரையில் வருவாய் தீா்வாயம்

மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இதில், ராஜகம்பீரம், கால்பிரிவு, மானாமதுரை, அரிமண்டபம், எம். கரிசல்குளம், அரசனேந்தல், கிளங்காட்டூா், கீழப்பசலை, அன்னவாசல், வேதியரேந்தல், தெற்கு சந்தனூா், மிளகனூா், சின்னக் கண்ணனூா், தெ.புதுக்கோட்டை ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து நிவாரண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், பிற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கவும் மாவட்ட ஆட்சியா், அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதில், மானாமதுரை வட்டாட்சியா் ராஜா உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 529 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com