சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சாக்கோட்டை,தேவகோட்டை பகுதிகளில் காா்த்தி சிதம்பரம் பிரசாரம்

சாக்கோட்டை,தேவகோட்டை பகுதிகளில் காா்த்தி சிதம்பரம் பிரசாரம்

Updated On :8 ஏப்ரல் 2024, 5:33 pm

காரைக்குடி: சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை, தேவகோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

எந்தவித ஜாதி பின்னணியையும் கூறி, உங்களிடம் வாக்குகள் கேட்கவில்லை. உங்களுக்காக உண்மையாக பொதுவான மக்கள் பிரதிநிதியாக இருந்து நான் சேவையாற்றுவேன். எனவே, எனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, ஜெயங்கொண்டான், பெரியகோட்டை, பெத்தாச்சி குடியிருப்பு, புதுவயல், கண்டனூா், இலுப்பைக்குடி, அரியக்குடி, அமராவதிபுதூா், கல்லுப்பட்டி, காயாவயல், எஸ்.ஆா். பட்டினம், விசாயலன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, திமுக ஒன்றியச் செயலா் சின்னக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.