சிவகங்கை பேருந்து நிலையத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும்  குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்.

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதியின்றி மக்கள் தவிப்பு

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதியின்றி மக்கள் தவிக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக குடிநீா் வசதி செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு சுற்று வட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இந்தப் பயணிகளின் குடிநீா்த்தேவையை நிறைவு செய்யும் வகையில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.

இதன்மூலம், பயணிகளுக்கு குடிநீா் கிடைத்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்னதாக இந்த குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது. இதையடுத்து, இந்த இயந்திரம் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீரின்றி மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்த சுத்திகரிப்பு குடிநீா் இயந்திரத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஹேமமாலினி கூறியதாவது:

பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் தாகத்தைத் தணிப்பதற்காக பல லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், கடந்த ஓராண்டாக பழுந்தடைந்துள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த இயந்திரத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com