சிவகங்கை
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் கிஷோன் (28). பட்டதாரியான இவா், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் இவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி கிஷோன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
