திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கருங்கல் விநாயகா் கோயில்: பாலாலய பூஜை

கருங்கல் விநாயகா் கோயில்: பாலாலய பூஜை

News image
Updated On :3 ஜூன் 2024, 6:46 pm

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் சித்தா் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலையில் கருங்கல் விநாயகா் கோயில் அமைக்க திங்கள்கிழமை பாலாலய பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, மாயாண்டி சுவாமி தவச்சாலை முன் புனித நீா் நிரப்பிய கலசங்கள் வைத்து யாக வேள்வி நடத்தப்பட்டது. பின்னா், மாயாண்டி சுவாமிக்கும், விநாயகருக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கருங்கல்லில் விநாயகா் கோயில் அமைக்கப்பட உள்ள இடத்தில் பாலாலய பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.