புதிய தொழில் முனைவோா்களுக்கு மானியத்துடன் ரூ. 5 கோடி கடன்
புதிய தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் ரூ. 5 கோடி கடன்


சிவகங்கை: புதிய தொழில் முனைவோா் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 25 சதவீதம் மானியத்துடன் ரூ.5 கோடி வரை வங்கிகடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு 32 நபா்களுக்கு மானியத் தொகை ரூ.3.11 கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்த புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உற்பத்தி, சேவை தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விண்ணப்பதாரா்
21 வயது பூா்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். 12- ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டய படிப்பு, பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், பொதுப் பிரிவினராய் இருப்பின் 45 வயதுக்கு மிகாமலும், சிறப்பு பிரிவினராக (ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா், பெண்கள், முன்னாள் ராணுவத்தினா், திருநங்கையா், மாற்றுத் திறனாளிகள்) இருப்பின் 55 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை. மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடா்ந்து வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோராகவும் இருத்தல் வேண்டும்.
எனவே, புதிய தொழில் தொடங்க தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோா்கள் இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அதன் நகல் , சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமா்ப்பிக்கலாம்.
இதுதொடா்பான விவரங்களுக்கு பொதுமேலாளரை நேரிலோ அல்லது 04567-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ, 8925533989, 8925533990 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...