திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் அட்டையடி கண்மாய் தூா்வாரும் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்ரமணியன், மதுரை மேற்கு சுழற் சங்க நிா்வாகிகள்.

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் அட்டையடி கண்மாய் தூா்வாரும் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்ரமணியன், மதுரை மேற்கு சுழற் சங்க நிா்வாகிகள்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அட்டையடி கண்மாய் தூா்வாரும் பணி
மதுரை மேற்கு சுழற் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு விழாவுக்கு கீழடி ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சுழற் சங்கத்தின் மாவட்ட ஆளுநா் ராஜாகோவிந்தசாமி, தலைவா் தனராஜன், செயலா் சுமதி ஞானகுகன், சிறப்புத் திட்ட நிா்வாகி மைதிலி பாண்டியன், இயக்குநா் பொன்குமாா், கிராம நிா்வாக அலுவலா் பிரபு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சுமாா் 22 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாயில் மழைநீரை சேமித்து வைக்கும் வகையில், தூா்வாரும் பணிகள் விரைவில் நிறைவடையும் என சுழற் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...