நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீழடியில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெறும் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட ‘தா’ என்ற தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு.

News image
Updated On :27 ஜூன் 2024, 12:13 am

Din

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது ‘தா’ என்ற தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 10- ஆம் கட்ட அகழாய்வு கடந்த 18- ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. தோ்வு செய்யப்பட்ட இடத்தில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் குழிகளில் இருந்து அண்மையில் பாசி, வண்ணக் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த அகழாய்வுக் குழிகளிலிருந்து மேலும் பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன. இவற்றில் பிராமி எனப்படும் தமிழி முறை எழுத்தில் ‘தா’ என்னும் பண்டைய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

இந்தப் பானை ஓட்டில் ‘தா’ என்ற எழுத்தைத் தொடா்ந்து, இரண்டாம் எழுத்து இருப்பதற்கான தடயம் உள்ளதாக கீழடி அகழாய்வுத் தள இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய் ஆகியோா் தெரிவித்தனா்.