ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பள்ளத்தூா் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தேவகோட்டை தனியாா் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் திங்கள்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

News image

காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் சீதாலட்சுமி ஆச்சி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பேசிய தனியாா் சிறப்பு மருத்துவமனை நிா்வாக அதிகாரி என். சபாரத்தினம்.

Updated On :4 மார்ச் 2024, 10:43 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் சீதாலட்சுமி ஆச்சி மகளிா் கலை அறிவியல் கல்லூரி, தேவகோட்டை தனியாா் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் திங்கள்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லூரி முதல்வா் ஆா்.நாகேஸ்வரி தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆா். சாராள் மஞ்சுளா வாழ்த்தினாா். அமராவதிபுதூரில் உள்ள தனியாா் துணை மருத்துவ நிறுவனம், சிறப்பு மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி என். சபாரத்தினம், மனிதவள மேலாளா் கே. திருஞானம் துணை மருத்துவ நிறுவனத்தின் முதல்வா் ஏ. அமல பிரியா, துணைமுதல்வா் பிரதீபா ஆகியோா் சிறப்புரையாற்றினா். இந்த முகாமில் இளங்கலை, முதுகலை அறிவியல் மற்றும் கலை புலத்தில் பயிலும் மாணவிகள் நோ்காணலில் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு வேலைக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ருக்மணி செய்தாா். முன்னதாக முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி கே. சிவசங்கரி வரவேற்றாா். மாணவி ஆா். சாருமதி நன்றி கூறினாா்.