மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேலுச்சாமி மகன் மகேந்திரன் (43). இவா், பிப்ரவரி 25 -ஆம் தேதி மேலப்பிடாவூா் கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான தோப்புக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, செய்யாலூா் பாலம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

