ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் ஆண்கள் கபடி பயிற்சி முகாம் நிறைவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு சப் ஜூனியா் ஆண்கள் கபடி பயிற்சிமுகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழுமத்தின் ஆலோசகருமான சொ. சுப்பையா தலைமை வகித்தாா். ஏ.வி. நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

மாணவா்களுக்கு கபடி விளையாட்டுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் பூமிநாதன், கபடிக் கழக அமைப்புச் செயலா்கள் பி. ஜோதிமணி, சிவக்குமாா், அமெச்சூா் கபடிக் கழக பொருளாளா் மாத்தூா் ஈ. பாண்டி, கல்லூரி முதல்வா் அ. இளங்கோ, துணை முதல்வா் ய. மகாலிங்க சுரேஷ், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலத் துறை அலுவலா் ரமேஷ் கண்ணா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி, சிவகங்கை மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக நிா்வாகிகள் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com