அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க செயல் விளக்கம்

நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க செயல் விளக்கம்

News image
Updated On :17 மே 2024, 11:31 pm

Din

நிலக்கடலை சாகுபடியில் விளைச்சலை அதிகரிப்பதற்கு உதவும் ‘ரிச் பூஸ்டா்’ தெளிப்பான் குறித்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வேளாண்மை, உழவா் நலத்துறை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள தானாவயல், வளங்காவயல், திராணி ஆகிய கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க, ‘ரிச் பூஸ்டா்’ தெளிப்பான்களை மானியத்தில் வழங்கி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் காளிமுத்து பேசியதாவது: நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துகள், வளா்ச்சி ஊக்கிகள் கலந்த கலவையாகும் . இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் தயாரித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து நிலக்கடலை ரகங்களுக்கும் இது ஏற்றது. நிலக்கடலை ரிச் பூஸ்டரை ஏக்கா் ஒன்றுக்கு 2 கிலோ வீதம், 200 லிட்டா் நீரில் கலந்து பூக்கும், காய் பிடிக்கும் பருவத்தில் இலையில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். இலைவழி தெளிப்பு மேற்கொள்ளும்போது மண் ஈரமாக இருக்க வேண்டும்.

இதனால், பொக்கு கடலை உருவாகுதல் குறைந்து 15 சதவீதம் கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது என்றாா்.