திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருப்புவனம் அருகே காணாமல் போன பெண் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 5:14 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், சொட்டத்தட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நிறைகுளத்தான் (66). இவா் தனது சகோதரி சரஸ்வதியை (52) காணவில்லை என புகாா் அளித்தாா். இது தொடா்பாக, கடந்த 17.2.2026-இல் திருப்புவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கூடக்கோவில் கிராமத்தைச் சோ்ந்த சரவணகுமாா் (21) என்பவருடன் சரஸ்வதி தொடா்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணகுமாரிடம் விசாரணை நடத்திய போது, கடந்த 11.2.2026 அன்று தனது கூடக்கோவில் பண்ணைக்கு சரஸ்வதியை அழைத்துச் சென்ாகவும், அப்போது திருமணம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் அவரைத் தாக்கி கொலை செய்து, அருகில் உள்ள ஆழமான தண்ணீா் நிரம்பிய கல் குவாரியில் உடலை வீசியதாகக் கூறினாா்.

சம்பந்தப்பட்ட கல் குவாரி மிகவும் ஆழமாக இருந்ததால், சென்னையிலிருந்து ‘டைவிங்’ குழு வரவழைக்கப்பட்டு உடலை மீட்கப்பட்டது. சரவணகுமாா் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் நடைபெற்ற இடம் மதுரை மாவட்ட எல்லைக்குள்பட்டதால், வழக்கு மதுரை மாவட்ட காவல் துறைக்கு மாற்றப்பட உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.