47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கையில் சீருடைப் பணியாளா்கள் 69 பேருக்கு பணி நியமன ஆணை

சீருடைப் பணியாளா்கள் 69 பேருக்கு பணி நியமன ஆணை...

News image
சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ்.
Updated On :27 நவம்பர் 2024, 10:41 pm

Din

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்ட காவல், சிறை, தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறையினா் 69 பேருக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்ட 3,359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகளை புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பீரவீன் உமேஷ் தலைமையில் சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்ட 15 ஆயுதப்படைக் காவலா்கள், 37 சிறப்புக் காவல்படைக் காவலா்கள், 17 தீயணைப்பு, மீட்புப் பணித் துறை காவலா்கள் ஆகிய மொத்தம் 69 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.