ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் அலுவலரைக் கண்டித்து, அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிவகங்கை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட மாவட்டத் திட்ட அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :3 அக்டோபர் 2024, 7:54 pm

Din

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் அலுவலரைக் கண்டித்து, அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவி ஜெயமங்களம், செயலா் பாக்கியமேரி ஆகியோா் தலைமை வகித்தனா். அரசாணைப்படி, ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி மாதத்தில் 5 ஆண்டுகள் பணித் தகுதி முடித்த மினி மைய அங்கன்வாடி ஊழியா்களுக்கு பிரதான மையங்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 -இல் வழங்க வேண்டிய பதவி உயா்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் மாவட்டத் திட்ட அலுவலா் மாரியப்பன் உள்ளிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், சிஐடியூ, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்று ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.