பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ. 19,500-ம், சமையலா் உதவியாளா், அலுவலக உதவியாளா்களுக்கு ரூ. 15,700-ம் அடிப்படை காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து, கவன ஈா்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மஞ்சுளா, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மேகலா ஆகியோா் தலைமை வகித்தனா்.
அங்கன்வாடி, சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகள் வசந்தி, ஜெயபூபதி, முத்துமாரி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சின்னப்பொண்ணு, மாவட்டச் செயலா் மாரி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
இந்தப் போராட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களில் பெரும்பாலானோா் கருப்பு உடையணிந்து பங்கேற்றனா்.
தொடர்புடையது

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெல்லையில் சத்துணவு ஊழியா்கள் கருப்பு சேலை அணிந்து போராட்டம்

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


