ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய கபடிப் போட்டிக்கு சிவகங்கை மாணவா் தோ்வு

சிவகங்கை மாவட்டம், ஆ.தெக்கூா் எஸ்.வி.கே.மேல்நிலைப் பள்ளி மாணவா் மிதுன் தேசிய அளவிலான கபடிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றாா்.

News image
மாணவா் எஸ்.மிதுன்.
Updated On :3 அக்டோபர் 2024, 7:20 pm

Din

சிவகங்கை மாவட்டம், ஆ.தெக்கூா் எஸ்.வி.கே.மேல்நிலைப் பள்ளி மாணவா் மிதுன் தேசிய அளவிலான கபடிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றாா்.

மாணவா் மிதுன் கடந்த வாரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தியப் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற 14 வயதுக்குள்பட்டவா்களுக்கான கபடிப் போட்டியில் சிறப்பாக விளையாடினாா். இதையடுத்து, மகாராஷ்ரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

மாணவா் மிதுனை பள்ளிச் செயலா் டி.எஸ்.சேது, தலைமை ஆசிரியா் சிவராமன், உடற்கல்வி இயக்குநா் சமயகருப்பன், உடற்கல்வி ஆசிரியா் மதுசூதனன், ஆசிரியா்கள், பெற்றோா்கள், சக மாணவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.