ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொன்று இளைஞா் தற்கொலை

சிவகங்கை அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த கல்லூரி மாணவி குத்திக்கொலை

News image
சிவகங்கை அருகே மதகுபட்டியில் கொலை நிகழ்ந்த வீட்டில் வியாழக்கிழமை விசாரணை நடத்திய போலீஸாா்.
Updated On :10 அக்டோபர் 2024, 11:12 pm

Din

சிவகங்கை அருகே வியாழக்கிழமை திருமணம் செய்து கொள்ள மறுத்த கல்லூரி மாணவியை மதுப் புட்டியால் குத்திக் கொன்றுவிட்டு, இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான மலையாண்டி மகள் மோனிஷா (21). இவா் சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவரை, கோவையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையைச் சோ்ந்த அவரது உறவினரான ராமகிருஷ்ணனின் மகன் ஆகாஷ் (24), காதலித்து வந்தாா். இவரது காதலை மாணவியின் வீட்டாா் ஏற்க மறுத்துவிட்டனராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மதகுபட்டிக்கு வந்த ஆகாஷ், வீட்டில் தனியாக இருந்த மோனிஷாவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினராம். அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ஆகாஷ் அங்கு கிடந்த மதுப் புட்டியை உடைத்து மோனிஷாவின் கழுத்தில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

 மோனிஷா.

மோனிஷா.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஆகாஷ், அதே மதுப் புட்டியால் தன்னையும் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சிவகங்கை நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின், மதகுபட்டி போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.