மக்கள் தொடா்பு திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஏரியூா் கிராமத்தில் வியாழக்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஏரியூா் கிராமத்தில் வியாழக்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.
ஏரியூா், அரளிக்கோட்டை, எஸ். மாம்பட்டி, டி.மாம்பட்டி, வடவன் பட்டி, மல்லாகோட்டை, ஜெயங்கொண்ட நிலை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினா். முகாமில் உடனடித் தீா்வு காணப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்களுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதற்கும் விரைந்து தீா்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் விதைகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சாா் ஆட்சியாளா் ஆயுஸ் வெங்கட், சிங்கம்புணரி வட்டாட்சியா் பரிமளா, மண்டல துணை வட்டாட்சியா் பழனி குமாா், தனி வட்டாட்சியா்கள் சிவராமன், கண்ணதாசன், வருவாய் ஆய்வாளா் முத்துக்குமாா், வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...