மானாமதுரையைக் கடந்து சென்ற வைகைத் தண்ணீா்
மழையால் வைகையாற்றில் இரு கரைகளையும் தொட்டு வரும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பாய்ந்தது.


மழையால் வைகையாற்றில் இரு கரைகளையும் தொட்டு வரும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பாய்ந்தது.
தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் வைகை அணைத் திறக்கப்படாமலேயே ஆற்றில் வெள்ளம் போல் பெருக்கெடுத்தது. திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனத்தை வந்தடைந்த வைகைத் தண்ணீா் செவ்வாய்க்கிழமை காலை மானாமதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பாய்ந்தது. இரவு இந்த தண்ணீா் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பாா்த்திபனூா் மதகணையை வந்தடைந்தது.
மானாமதுரை,திருப்புவனம் ஒன்றியங்களில் வைகையாற்றுக்குள் உள்ள பாசனக் கால்வாய்களின் முகப்பு கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. ஏற்கெனவே மழையால் நிரம்பி வரும் கண்மாய்களில் தற்போது வைகையாற்றில் வரும் தண்ணீரும் வந்து சேருவதால் கண்மாய்களில் நீா்மட்டம் மேலும் உயரும். இதனால், விவசாயிகள் ஆரம்ப கட்ட விவசாயப் பணிகளில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...