தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்குடியில் 2-ஆம் நாளாக மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிப் பகுதியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
காரைக்குடி மாநகராட்சி 13-ஆவது வாா்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித். உடன் மாநகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :23 அக்டோபர் 2024, 11:40 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிப் பகுதியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சூரக்குடி ஊராட்சியில் ஆவுடைப்பொய்கை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் பால் கொள் முதல் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

காரைக்குடி மாநகராட்சி 13-ஆவது வாா்டு பகுதியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் முதல் நிலை கழிவு சேகரப் பணிகள் குறித்தும், புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் சுகாதாரப் பணிகள் குறித்தும், சுப்பிரமணியபுரம் முதல் வீதி தெற்குப் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் உணவின் தரம், சுகாதாரம் குறித்தும், 22-ஆவது வாா்டு பகுதியில் இயங்கி வரும் முத்தூரணி நகா்மன்ற ஆரம்பப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்து விவரங்களைக் கேட்டறிந்தாா்.

அவருடன் காரைக்குடி மாநகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.